பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

71


என்றெல்லாம் பார்ப்பதில்லை. நமது உடலின் தட்ப வெப்ப நிலையைப் பாழ்படுத்தினாலும் பரவாயில்லை. நான் மற்றவர்களைப் போலவே என்று தடித்தமாக, தாறுமாறாக அணிந்து கொண்டு தறிகெட்டு அலைகிறார்கள்.

உதாரணத்திற்கு சென்னை ஒரு சூடான பிரதேசம். அதிக வெப்பம் இருந்தாலும், அதிகம் குளிர் தாக்காத பகுதியைக் கொண்டது. மைசூர், காஷ்மீர் போன்ற இடங்கள் பயங்கரக் குளிருக்குப் பேர்போனவை. அங்கே உள்ளவர்கள் இயற்கையின் சீற்றமான சிலுசிலுப்பிலிருந்து காத்துக் கொள்ள தோலாலான மற்றும் கம்பளியாலான உடைகளை அணிந்து கொள்கிறார்கள். அந்த கதகதப்பான ஆடைகளை வாங்கிக் கொண்டு வந்து சென்னையிலே அணிந்து கொண்டு திரிந்தால் பார்க்கிறவர்கள் சிரிக்கமாட்டார்களா? உடலும் அனலுக்குள் அவதிப்படாதா?

இவ்வாறு ஏறுக்குமாறாக உடையணிந்து கொள்வதென்பது இயற்கைக்கு மாறானது. அதனால்தான் நமது முன்னோர்கள் ஆடை அணிவதில் அழகும் வேண்டும், எச்சரிக்கையும் வேண்டும் என்பதால்தான் ஆடை என்றும், உடை என்றும், உடுக்கை என்றும் மகிழ்ச்சியின் மர்மத்தைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி நமக்குச் சரணாகும். இல்லையென்றால் அவமானம்தான்.

☐☐☐