பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 * உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்

ஆன்மாவுக்கு அதிகமான ஆற்றலையும், சக்தியும் கொடுப்பதுதான் இந்த ஒழுக்கம் என்பதால், இயற்கை மனிதர்களை இயற்கையிலேயே ஆட்டிப் படைப்பதால், வள்ளுவர் இயற்கையின் மேன்மையைப் பாடுகிற பொழுது, 'கற்கக்கசடற' என்றார்.

'கற்கை நன்றே, கற்கை நன்றே என்று அவ்வைப் பிராட்டி பாடினாள்.

கண்டதைக் கேட்கப் பண்டிதன் ஆவாய்' என்பது

பழமொழி.

'கற்கக் கசடற என்றால் எதைக் கற்பது, எப்படிக் கசடறக் கற்பது என்ற கேள்வி எழுகிறது. ‘பிச்சைபுகினும் கற்கை நன்றே என்று பாடினார் அவ்வைப் பிராட்டி. எதைக் கற்றால் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அது என்ன கற்கை நன்றே,

கண்டு அதைக் கற்கப் பண்டிதன் ஆவான் என்றால் பண்டிதனாக எதைக் கண்டு கற்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் ஒரே பதில் இந்தப் பாடல்களில் உள்ள 'க' என்ற சொல் நமக்குக் கொடுக்கிறது.

'க' என்றால் நீர், நெருப்பு, காற்று, உடல், வியாதி, காமன், எமன் - என்றெல்லாம் பொருள்கள் உண்டு, கசடற என்றால் இயற்கையிலே புழுதியிலுள்ள தூசி, தூசி சேர்ந்துவிட்டால் அது அழுக்கு.

அழுக்கு அதிகமாகி விட்டால் அது பிசுக்கு, அந்தப் பிசுக்கின் பிழம்புதான் கசடு. அதாவது மண்டி.