பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்



இயற்கையாகவே உண்டாகிற கேடுகள், எதிர்மறைச் செயல்கள் எல்லாவற்றையும் உணர்ந்து இந்த அழுக்குகளை நீக்க முற்படுகிறவன், முயற்சிக்கிறவன் முழு மனிதனாக வாழ்கிறான்.

இயற்கையோடு வாழ முதல் தேவை உணர்வு (Sense) உணர்ந்து, உணர்ந்து தெளிந்து கொள்கிற மொத்த உணர்வுதான் தெளிவு. அந்தத் தெளிவின் திரட்சிதான் அறிவு. அறிவின் விரிவுதான் ஞானம்.

இயற்கையைப் பற்றிய ஞானம் இல்லாமல் இருப்பது அஞ்ஞானம். அவனை அஞ்ஞானி என்பார்கள். இயற்கையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்தவனுக்கு இருப்பது எஞ்ஞானம். அவனை எஞ்ஞானி என்பார்கள்.

இயற்கையைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டவனுக்கு இருப்பது விஞ்ஞானம். அவனை விஞ்ஞானி என்பார்கள்.

இவற்றிற்கும் மேலாக இருப்பது மெய்ஞானம். தன்னைப் பற்றிய அறிவும், தன்னைத்தான் தெளிவாக்கிக் கொண்டு வாழ்பவனைத்தான் மெய் ஞானி என்பார்கள்.

எனக்குள் அன்பானவர்களே, நீங்கள் நன்றாக மெய் ஞானத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக, எனக்குத் தெரிந்த ஒன்பது இரகசியங்களை உங்களுக்குக் கூறி விட்டேன்.

ஒருமுறை நீங்கள் படிக்கும்போது மிகச் சாதாரணமாகத் தோன்றும். மீண்டும், மீண்டும் படிக்கின்ற பொழுது உங்களுக்குள் ஏற்படுகிற உள்ளத்துடிப்பும்,