பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


88

இரகசியமும் - மகத்துவமும்

உடம்பைக் காப்பாற்றுகிற இரகசியங்கள் என்னவென்று இதுவரை நாம் மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு இருக்கிறோம். நாம் அன்றாடம் உரையாடி அகமகிழ்கின்ற சொற்களாக அவை இருந்தாலும், அவற்றை ஆழமாகச் சிந்திக்கின்ற பொழுது, நமக்குள்ளே அளப்பறிய ஆற்றலை ஏற்படுத்துகின்றன என்பதுதான் உண்மையாகும்.

இரகசிய வார்த்தைகள் எல்லாம் வலிமையாக இல்லாமல், வன்மையாகத் தோன்றாமல், மெல்லிய இசை நாதமாக மெருகேறி வந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.

வார்த்தைதான் வாழ்க்கை என்கிறோம். நாம் பேசுகிற வார்த்தைதான் வாழ்க்கையாக மாறுகிறது. ஒருவன் பேசுகிற வார்த்தையை வைத்துக் கொண்டுதான் அவன் நல்லவனா? அல்லவனா? வல்லவனா? வல்லுநனா என்று கணக்கிட முடிகிறது.