பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வேண்டும்? என்னென்ன முறைகள்? என்னென்ன வழிகள் என்று தெளிவாக, திட்டவட்டமாக, இந்நூலில் கூறியுள்ளேன். எளிய முறைகள் கற்பிக்கும் இனிய வழிகள் பயன் வந்து விளையும் பாங்குகள் எதிர்நோக்கும் இலட்சியப் பாதைகள் எல்லாவற்றையும் எளிய இனிய தமிழில் தந்திருக்கிறேன். இந்த நூலை அச்சிட்ட கிரேஸ் பிரிண்டர்ஸ், ஆக்க பூர்வமான பணிகள் ஆற்றிய திருவாளர்கள் ஆர். ஆடம் சாக்ரட்டீஸ், என். சி. ராஜ் மோகன் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். அருமையான இந்த நூலை, அறிவோடு பயன்படுத்தி, வருங்கால சமுதாயத்தை, வளமாக்க முனையும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், உடற்கல்வியில் ஈடுபாடுள்ள அனைத்துப் பெருமக்களுக்கும், என் அன்பான வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 'லில்லி பவனம்' அனபுடன சென்னை-600 017 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா