பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


101 பின்புறம் திரும்பு (About Turn) என்னும் கட்டளைக் கும் 2 எண்ணிக்கை கூற வேண்டும். ஒவ்வொரு முறையாகப் பார்ப்போம். வகுப்பு மாணவர்களை வலது பக்கம் திரும்பச் செய்ய, வலப் புறம் திரும்பு என்று கட்டளை இட வேண்டும். வலது காலை தரையில் வைக்கும் பொழுது கட்டளை யைத் தொடங்கி, இடது கால் தரைக்கு வரும் போது, இரண்டாவது கட்டளையை முடித்து விட வேண்டும். பின்புறம் திரும்பு என்ற கட்டளையை, செயல்படுத்தும் முறை கட்டளை - 1. இடது காலை இடது புறமாக தரையோடு திருப்பி பின்புறமாகக் கொண்டு செல்லவும். கட்டளை - 2. வலது காலை கொண்டு வந்து, இடது காலோடு சேர்த்து விடவும். இடப் புறம், வலப் புறம், திரும்பு என்கிற போது, மாணவர்கள் நேராக, விறைப்பாக உடலை வைத்துத் திரும்புவர். சிறிது வளைவாக அணியை நடக்கச் செய்ய பயன்படும் sLL-606m Left...wheel Right wheel grairugóm Guh. இடப்புறம் வளைந்து செல் (Left wheel) என்றி கட்டளை கொடுத்ததும், முன் வரிசையில் முதலாவதாக இடப் புறம் இருப்பவர், மெதுவாகத் திரும்ப, முன் வரிசையில் வலப்புறத்தில் முதலாவதாக இருப்பவர் வேகமாக இடப் புறம் வந்து, அணியின் வரிசை முறையை சரி செய்து கொள்ள வேண்டும்.