பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107


கற்பிக்கும் ஆசிரியர்க்கு சில குறிப்புக்கள்

1. கற்பிக்கும் பயிற்சியை, முழுமையாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

2. முதலில் காலடி முறையைக் கற்பித்து, மாணவர்கள் நன்கு தெரிந்து கொண்ட பிறகு, கை அசைவு முறையைக் கற்பித்து, பிறகு இரண்டையும் இணைத்து முழுதாகக் கற்பிக்க வேண்டும்.

3. மாணவர்கள் கற்று க் கொள்ள கஷ்டப்படுகிற நேரத்தில், ஆசிரியர் பொறுமையாக, விடாமுயற்சியுடன் கற்பிக்க வேண்டும்.

4. தொடர்ந்து செய்கிற முயற்சியால் தான், எளிமை யாகக் கற்பிக்க முடியும். ஆகவே, எண்ணிக்கை முறையில் கற்பித்தல் நல்லது.

5. எளிமையான அசைவுகளிலிருந்து கஷ்டமான அசைவுக்கு, மாணவர்களை உற்சாகத்துடன் கொண்டு செல்ல வேண்டும்.

7. ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள்

ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளை, சீருடல் பயிற்சிகள் என்று கூறலாம்.

தானே தனது உடலை சிறப்பாகக் கையாண்டு, சாகசம் மிகுந்த செயல்களைச் செய்வது தான் சீருடல் பயிற்சிகளாகும்.

இத்தகைய சீருடல் பயிற்சிகள் உடலுக்கு வலிமை, நல்ல திறமை உறுப்புக்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்ற ஆற்றல், தைரியம், தன்னம்பிக்கை, புத்திக்கூர்மை,