உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

எனவே தான், குருவாக திருவாக, மாணவர்கள் மனதிலே ஆசிரியர்கள் மாறாத ஓரிடத்தை வகித்து, பெருமையடைகின்றார்கள். பூரிப்படைகின்றார்கள்.

இவ்வாறு சிறப்பிடத்தைப் பெற்றிட, ஆசிரியர்கள் தங்களுக்குள்ளாக, பல வழி முறைகளை வகுத்துக்கொண்டு, குறைவறக் கற்றுத் தந்து, தாங்கள் எதிர்பார்க்கும் சிறந்த குணங்களை, நலன்களை மாணவர்களிடம் வளர்த்து விடுகின்றனர்.

இப்படியாக மேற்கொள்கின்ற வழிமுறைகளைத்தான் கற்பிக்கும் முறைகள் என்று குறித்துக் காட்டுகின்றனர் வல்லுநர்கள்.

கற்பிக்கும் கலையும் நிலையும்

கற்பிக்கும் முறை என்பது அசைந்து கொடுக்காத குன்று போன்றது அல்ல. நிலைமைக்கேற்ப நெகிழ்ந்து கொடுத்து, தேவைக்கேற்ப வளைந்து தந்து, விளைவுக்கேற்ப மாறிக் கொண்டும், மாற்றிக் கொண்டும், உதவுகிற உன்னத முறையாகும்.

வகுப்பறைக் கல்வியான பொதுக்கல்வி, சொல் விளக்கத்தின் மூலம் கற்பிக்கப்படுகிறது. விளையாட்டுத் திடலில் கற்பிக்கப்படும் உடற்கல்வியானது, சொல்விளக்கம், செயல்விளக்கம், பங்கு பெறும் உடல் இயக்கம் என்பதாகக் கற்பிக்கப்படுகிறது.

இந்த முறைகளில் ஈடுபடும் ஆசிரியரின் நோக்கம். எப்படி அமையவேண்டும் என்று முதலில் காண்போம்.