பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181


இதற்கான போட்டி நிரலை. 2 வகையாகப் தயாரிக்கலாம்.

1. ஏணி முறை.

2. கோபுர முறை.

1. ஏணி முறை (Ladder Method)

இதை ஒரடுக்கு முறை என்று கூட கூறலாம்.

சிறந்த ஆட்டக்காரர்களுடன், திறமையற்ற ஆட்டக்காரர்கள் மோதுவது என்பது இதில் இல்லை. எல்லோரும் எல்லாருடனும் போட்டியிட்டே ஆக வேண்டும் என்பது தான், இந்த முறையின் சிறப்பம்சமாகும்.

சீட்டுக் குலுக்கல் மூலமாகவோ, தெரிந்து வைத்திருக்கும் தன் முனைப்பு மூலமாகவோ, போட்டி நிரலைத் தயாரிக்கலாம்.

அதற்கான, சில விதி முறைகள் உள்ளன. அவற்றையும் காண்போம்.