பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186


3. இதனால் விளையாட்டுத் திறமைகளின் வளர்ச்சி மேலோங்குகிறது.

4. ஒவ்வொரு மாணவரும் தனிப்பட்ட முறையில் பங்கு பெறுவதில் ஏற்படுகிற மகிழ்ச்சியையும், தனது குழுவுக்குத் தன் பங்கினை ஆற்றுகிறோம் என்ற திருப்தியையும் பெறுகின்றனர்.

5. போட்டிகளில் பங்கு பெறுவதால், குறிப்பிட்ட அந்த விளையாட்டில் உள்ள பல விதிமுறைகளை, தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

6. விளையாட்டு போட்டிகளின் மூலமாக, தலைமை ஏற்று நடத்தல்; தலைமைக்குப் பணிதல், ஊக்க முடன் இறுதிவரை போட்டியிடுதல், வெற்றி தோல்வியால் பாதிக்கப்படாத மனம் பெறுதல் ஆகிய பண்பான குணங்கள் மென்மேலும் வளர்ச்சி பெறுகின்றன.

இப்படிப்பட்ட குழு விளையாட்டுகளுக்குப் பொருத்த மான விளையாட்டுக்களை சூழ்நிலை பார்த்து, தேர்ந்தெடுக்க வேண்டும்.

இறு விளையாட்டுக்கள், முன்னோடி விளையாட்டுக்கள், சாகசச் செயல்கள். தனித்திறன் போட்டிகள், தனிநடைப் வயிற்சிகள், ஒழுங்கு முறை உடற்பயிற்சிகள், கோபுரப்-