பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. கற்றலில் வளர்ச்சியும் எழுச்சியும் (PSYCHOLOGY OF LEARNING) கல்வியின் நோக்கம் கல்வியின் நோக்கமானது, குழந்தைகள் நடத்தையில் சில விசேஷமான, விருப்பமான மாற் றங்களை ஏற்படுத்து. வது தான். அந்த மாற்றங்கள் நிகழ்வது, அவர்கள் பெறும் அனுபவங்களால் தான். அனுபவங்கள் என்பது, அவர்கள் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள முயலுகிறபோதும்; தங்கள் ஆர்வங்களை நிறைவேற்றிக் கொள்கிறபோதும், ஏற்படுகிற நிகழ்ச்சிகளின் தொகுப்பாகும் ஒருவரது நடத்தையில், எண்ணங்களில், நடைமுறை யில், உணர்ச்சிகளில் ஏற்படுகிற மாற்றங்களைக் கொண்டே, அவர் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று அறிய முடியும் என்கிறார் ஒரு மேல்நாட்டறிஞர். கற்கும் தொடர்நிலை கற்றல் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், ஏற்படுகின்ற தொடர் நிகழ்ச்சியாகும்.