பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தசை வலிமையானது உடலுறுப்புக்களின் மொத்த செயல் திறனால் வளர்கிறது என்று பின்னாளில் கண்டு பிடிக்கப்பட்டது.

ஆகவே, ஒருவர் உடல் திறம் (Physical Fitness) உடையவர் என்பதை, பின்வரும் கூறுகள் கொண்டு, முடிவு செய்யலாம் என்ற ஒரு மரபு ஏற்பட்டது.

1. வலிமை (Strength)

2. வேகம் (Speed)

3. நெகிழ்ச்சித் தன்மை (Agility)

4. நீடித்துழைக்கும் ஆற்றல் (Endurance)

5. நரம்புத் தசை இணைந்த செயலாற்றல் (Neuro muscular Coordination)

இவற்றை அடிப்படையாகக் கொண்டு, தனியாள் உடல் திறத் தேர்வு, தரமான பொது உடல் திறத் தேர்வு என்று இரு பிரிவுகளாகப் பிரித்து, தேர்வு செய்து பார்க்கலாம்.

தனியாள் உடல் திறத் தேர்வு (Individual Physical Efficiency Test)

கீழ்க்காணும் உடலியக்க செயல்கள் மூலமாக, பள்ளி மாணவர்களின் உடல் திறனை தேர்வு செய்து பார்க்கலாம்.

1. 100 மீட்டர் ஓட்டம் (வேகம்).

2. உயரம் தாண்டல் (நெகிழ்ச்சியும், உறுப்புக்கள் இணைந்த செயல் ஆற்றல்)

3. நீளம் தாண்டல் (வேகம், நெகிழ்ச்சி, உறுப்பு செயல் ஆற்றல்)

4. கிரிக்கெட் பந்தெறி (வலிமை, இணைந்த செயலாற்றல்)

5. தொங்கு கம்பியில் ஏறி இறங்கல். (வலிமை, தசைச் சக்தி) (Pull ups)