உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

முதன்மை விளையாட்டுக்களை, மற்றும் ஓடுகளப் போட்டி நிகழ்ச்சிகளைக் கற்பிக்க, இந்த முறை சிறப்பானதாகும்.

11. கட்டளை முறை (Command Method)

ஒரு செயலைச் செய்யுமாறு மாணவர்களைப் பணிக்க, இந்தக் கட்டளை முறை பயன்படுகிறது.

எந்தச் செயலை, எப்பொழுது, எப்படிச் செய்ய வேண்டும் என்பதை கட்டளை மூலம் ஆசிரியர் மாணவர் களுக்குக் கற்றுத் தருகிறார்.

இதற்காகப் பயன்படும் சொற்களைக் கட்டளைச் சொற்கள் என்று அழைக்கிறோம்.

இந்த கட்டளை முறை, இரண்டு வகைப்படுகிறது.

1. உணர்த்தும் கட்டளை முறை (Response Command)

2. தொடர்ந்து செய்யும் கட்டளை முறை
(Rhythmic Command)

உணர்த்தும் கட்டளை முறை என்பது, ஒரு குறிப்பிட்ட செயலின் ஒவ்வொரு நிலையையும் விளக்கி, திருத்தி, நுட்பமாகச் செய்ய வைக்கும் சிறப்புடையது.

இதையும் மூன்று கூறாகக் கற்றுத்தரக் கூடும்.

அ) ஆசிரியர் பகுதி பகுதியாகப் பகுதியினை விளக்கிக் கூறும் முறை. இதை (Explanation Stage) பிளக்கும் நிலை என்பர்.

ஆ) விளக்கிக் கூறிய செயலின் நிலை, மாணவர்கள் மனதில் பதியவும், புரிந்து கொள்ளவும் கூடிய வகையில் நேரம் ஒதுக்கித் தரும் நிலை. (Pause Stage)