பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெற முடியா து. மற்றவர்கள் காலில் பட்டு, இலக்கிற்குள் பந்து போனால், அது கோல் ஆகும். 18. நேர் முக உதை பற்றி சிறு குறிப்பு வரைக: தெரிந்து செய்கிற விதி மீறும் தவறுகள் எல்லாம், குற்றம் என்று (Intentional toul) கருதப்படுகிறது. கீழே காணும் குற்றம் எல்லாம். நேர் முகத் தனி உதைத் தண்டனையைப் பெற்றுத் தருகிறது. - 1. எதிராளியை உதைத்தல், உதைக்க முயலுதல் 2. எதிராளியின் காலை இடறிவிடுதல் 3. எதிராளியின் மேல் ஏறிக்குதித்தல் 1. அபாயகரமான முறையில் எதிர l് து மோ துதல் 5. எதிராளியைப் பின்புறமிருந்து தாக்குதல் எதிராளியை அடித்தல் அடிக்க முயலுதல் 7 கைகளால் எதிராளியைக் கட்டிப் பிடித்து தடுத்தல் 8 பந்தைக் கையால் வேண்டுமென்றே பிடித்தல் 9, எதிராளியைக் கைகளால் பிடித்து, தள்ளி விடுதல் - குறிப்பு: 1. இந்தத் தவறுகளில் ஏதாவது ஒன்று, தடுப்பவர்களின் ஒறுநிலைப் பரப்பிற்குள் நடந்தால், ஒறுநிலை உதை தண்டனையாகத் தரப்படும். 2. இந்தத் தவறுகள் ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியிலே நடந்தால், நேர் முகத் தனி உதை தண்டனையாகத் தரப்படும். - 3. நேர் முகத் தனி உதையால், பந்தை நேராக இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் (Goal) பெற முடியும். 19. வெற்றி எண் (0ேal) என்பது எப்படி எப்பொழுது கிடைக்கும்? இலக்குக் கம்பங்களுக்கு இடையே. கடைக் கோட்டைக் கடந்து பத்து முழுவதுமாகக் கடந்து சென்றால், அதுவே வெற்றி என்னைப் பெற்றுத் தரும். 20. ஒரு குழு எப்போது வெற்றியைப் பெறுகிறது: ஒரு குழு ஆட்ட முடிவில் அதிக வெற்றி எண்களைப் பெறுகிற டோது. வெற்றியைப் பெறுகிறது - 21. கால் பந்தாட்ட ஆட்ட அதிகாரிகள் யார் யார்? 1 நடுவர்; 2கோடு கண்காணிப்பாளர்கள்; 1 மேஜை அதிகாரி. 22. கால் பந்தாட்டத்தில் உள்ள முக்கியத் திறன்கள் யாவை? 1. பத்துடன் ஒடுதல் (Dribbling) 2. பந்தை உதைத்தல் 3 பந்தை - வழங்குதல் பந்தை எதிராளியிடமிருந்து கவர்தல் 5. தலையாலிடித்தல், 6. எதிராளியிடமிருந்து சமாளித்தல் 7 எதிரியை ஏமாற்றுதல் 8 இலக்கினைக் காத்தல். 33