பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்பற்றி வாழக் கூடிய எல்லா வகையான உடல் நலப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் சத்துள்ள உணவு, சமநிலை உணவு, தொடர்ந்த உடற்பயிற்சி, போதிய ஒய்வு, உறக்கம் என்று அமைந்திருப்பதை அறிந்து நாம் பின்பற்றுவதே நல்ல உடல் நல வழியாகும். 4. உடல் நலம் நமக்கு ஏன் தேவை? ஒவ்வொரு ஆண்மகனும் பெண்மணியும், வாழ்க்கை அதிசயத்தில், எதிர் நீச்சல் போட்டு வாழ்வதிலே, மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதை மகிழ்ச்சியாகவும். மேம்பட்ட திறமையோடும் செய்து வெற்றிபெறவே, நமக்கு உடல் நலம் தேவைப்படுகிறது. 5. நோய் எதிர்ப்புச் சக்தி (immunity) என்றால் என்ன? வெளியில் இருந்து தாக்குகிற நோய்களில் இருந்து காத்துக் காப்பாற்றுகிற தேக சக்திக்கே நோய் எதிர்ப்புச் சக்தி என்று பெயர். இந்த எதிர்ப்புச் சக்தி, நோய் ஆக்ரமிக்காமல் தடுத்து நிறுத்துவதே ஆகும் நோயை ஏற்றுக் கொண்டு பிறகு போராடுவது அல்ல. 6, 2-Lo sband argårporao argărașr? (Physical Health) தேகத்தின் வயது, இனம் (sex), தான் செய்கிற தொழிலுக்கு ஏற்ப, உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும், ஒருங்கிணைந்து திறம்பட ஒத்துழைத்து உழைப்பதையே உடல் நலம் எண்கிறோம். 7. udair spouth grairsprao arcăraw? (Mental health) ஒருவரது மனநலம் என்பது கீழ்க்காணும் செயல் முறைகளைப் பொறுத்தே வெளிப்படும். 1. தனது திறமைகளை,பலவீனங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்வில் ஏற்படும் சோதனைகளை திறமையாகவும், வெற்றிகரமாகவும் தீர்த்துக்கொள்ளுதல் 2. மற்றவர்களையும் மனிதர்கள் தாம் என்று ஏற்றுக் கொண்டு அவர்கள் உணர்வுகளைமதித்து, சந்தோஷமான உறவுடன் நடந்து கொள்ளுதல் 3. தனது திறமைகளை உணர்ந்து தலைக்கண மில்லாமல், பண்பாளனாக (Gentleman) வாழ்ாபவர்க்கே நல்ல மன நலம் உள்ளது என்று கருதப்படும். 8. &epo, shavto (Social Health) argårpret arcărcarz ஒருவர் தனது அறிவாற்றலை மற்ற சமுதாய மக்களுடன் பகிர்ந்துகொண்டு தனக்கும். தன் குடும்பத்திற்கும், சார்ந் திருக்கிற சமுதாயத்திற்கும். தனது தாய் நாட்டிற்கும் வளர்ச்சி பூர்வமாக உதவி, ஒத்துழைத்து வாழ்வதையே சமூக நலம் என்கிறோம். 57