பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

139


வெறுப்பும்,செயல்படும் வேகமும் யூகமும்; விரைவாகவும் குறைவாகவும் இருக்கும்.

ஆக, உடற்கல்வி ஆசிரியர்களின் பணியானது, மிகவும் இக்கட்டானது. குழப்பமானது. குதர்க்கமானது கூட

ஒற்றுமை வேற்றுமைகளை குழந்தைகளிடம் கண்டு கொண்டு, அதற்கேற்பப் பயிற்றுவிக்க வேண்டும். பாரம்பரிய சிறந்த குணங்கள், எழுச்சியூட்டும் சூழல், வளர்ச்சி மிக்க தேகம் மூன்றும் சேர்ந்து அமைவது எப்பொழுதும் சாதாரணமாக அமையாததாகும். ஆகவே தனிப்பட்ட ஒருவரின் உண்மை நிலையை அறிந்து உதவுவது தான் உண்மையான உடற்கல்வி ஆசிரியர்களின் சிறந்த கடமை ஆகும்.

உடற்கயிற்சிக்கு முன், உகந்த இலட்சியத்தை அமைப்பதற்கு முன், குழந்தைகளிடம் உள்ள உடல் வேற்றுமையையும் நன்கு கண்டாகவேண்டும்.

ஆண் பெண் வேறுபாடு

1. உடலமைப்பு வேறுபாடு : (Anatomical Difference)

உடல் அளவில் வேறுபாடு பெண்களைவிட ஆண்களின் அளவு உயரத்திலும், எடையிலும் அதிகமாக உள்ளன. இந்த வித்தியாசம் பிறப்பிலிருந்தே தொடங்கிவிடுகிறது. பிறக்கும் பெண் குழந்தையின் உயரமும் எடையும் பிறக்கும் ஆண் குழந்திையின் அளவை விட குறைந்தே பிறக்கிறது.

பெண் பெரியவளாகும் (Puberty) வரை, ஆணின் வளர்ச்சியுடன் இணையாகவே இருந்து கொண்டு வரு