பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
138
உடற்கல்வி என்றால் என்ன?


அது எப்படி நடக்கும்?

ஒரு விவசாயி சிறந்த வேளாண்மை செய்கிறான் என்றால், அதற்காக, அவன் சிறந்த விதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.நிலத்தை நேரத்தில் பண்படுத்துகிறான் காலம் பார்த்து விதைக்கிறான். வேண்டிய உரங்களைப் போடுகிறான். பயிருக்குப் போதிய நீரைப் பாய்ச்சுகிறான். பூச்சிகள், நோய்களிலிருந்து மருந்திட்டுப் பயிர்களைக் காப்பாற்றுகிறான். அதனால் தானே அவன் எதிர்பார்த்தப் பலன்களை அறுவடை செய்கிறான்.

வேளாண்மையும் விளையாட்டு வீரர்கள் விளைச்சலும் ஒன்றாகத் தானே தோன்றுகிறது.

மாணவர்கள் அல்லது குழந்தைகளில் இயற்கையான திறமைகளை முதலில் அறிந்து கொள்வது, அவர்களில் சுற்றுப்புறச் சூழலை நன்கு புரிந்து கொள்வது. அவர்களது விருப்பம், வேட்கை, இலட்சியம், திறமை, செயல்படும் யூகம், முன்னேறும் வேகம் இவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது. இப்படித் திட்டமிட்ட ஆய்வுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்படும்பொழுது தான், நல்ல விளையாட்டு வீரர்களை உருவாக்கிட முடியும்.

குழந்தைகள் என்பவர்கள் ஆட்டு மந்தைகள் போலல்ல. ஒரே சத்தத்தில், ஒரே குச்சியை வைத்துக் கொண்டு மேய்த்து விடுவது அல்ல.

குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள் ஆவார்கள். பற்பல பாரம்பரிய குணங்களைக் கொண்டு ஒன்று சேர்ந்திருப்பவர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள தனித்தன்மை போலவே, விருப்பும்