பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

உடற்கல்வி என்றால் என்ன?



அவர்கள் உயரத்திலும் அமைப்பிலும் வித்தியாசம் இருந்தாலும், பொதுவாக, அவர்கள் மெலிந்த தோற்றத்தினர் போல் விளங்குவார்கள்.

அவர்கள் உடல் தசைகள் குட்டையானதாகும் (Small), கவிழ்ந்து தொங்கும் தோள்களும், அவரது கைவிரல்களும், பாதங்களும் நீண்டும் நீளமாகவும் அமைந்திருக்கும்.

கைகள் குட்டையானதாக அதாவது நீளமற்றதாக இருக்கும். ஆனால் கால்களோ நீண்டும், குறுகிய அமைப்புடனும், காலின் வளைவும் (Arch) உயர்ந்த வளைவாக இருக்கும்.

இவ்வாறு நீண்டு நெடிதுயர்ந்த தோற்றத்துடன இருப்பவர்கள். அதிக ஆற்றலும் சக்தியும் (Vital Capacity) குறைந்தவர்களாக விளங்குவார்கள். அவர்களின் தோல் மெலிதாகவும், மென்மையாகவும் அமைந்திருக்கும்.அதில் அதிகமான மயிர்த்திரள் முளைத்திருக்கும்.

தலையின் அமைப்பு பெரிது. ஆனால் முகமும் தாடைகளும் குறுகிய வடிவினதாக இருக்கும். வாயின் உட்புற வளைவுகூட உயரமானதாக இருக்கும்.

இப்பிரிவினரின் முதுகெலும்பு அதிக வலிமையும் கனமும் குறைந்ததாக அமைந்திருக்கும். நுரையீரலும் இதயமும் அளவில் சிறியதாக இருந்தாலும், வயிறு நீண்டதாகவும் குழாய் வடிவு போலவும் அமைந்திருக்கும். அதனால் ஜீரண காரியங்கள் வேகமாக இராமல், தாமதமாக நடைபெறும். அதனால், தேகத்தில் அதிக சக்தியின்மை இருக்கும்.

அவர்களின் மெலிந்ததேகம், வலிமை குறைந்த சக்தி, மென்மையான அமைப்பு இவற்றால், அவர்கள் செய்யும்