இல்லாமல் சற்று மென்மையற்ற பசையற்ற தன்மையுடன் அமைந்திருக்கிறது.
இந்த உடல் பிரிவினர்கள் வேறுபட்ட குணநலம் கொண்டவர்களாக இருப்பதற்குக் காரணம், இவர்கள் முன்னர் கூறிய இரண்டு பிரிவுகளிலும் இணைந்த கலப்புள்ளவர்களாக இருப்பதேயாகும்.
குறிப்பு : பொதுவாக, எல்லா மக்களும் இப்படிப்பட்ட மூன்று பிரிவுகளுக்குள்ளே அடங்கியிருப்பதாகக் கூறிவிட முடியாது. மூன்று பிரிவுகளில் உள்ள குணாதிசயங்களில் தொட்டும் விட்டும் என்பது போல, தொடர்பு கொண்டவர்களாகவே விளங்குகின்றார்கள். இந்த மூன்றும் கூறுகிற குறிப்புகள் யாவும் ஒன்றுக் கொன்று சுதந்திரமாக இருக்கிறதென்றும் கூறிவிட இயலாதவாறு அமைந்திருக்கிறது என்று கருத்தும் நிலவி வருகிறது.
இதில் விடுபட்டுப்போன குறிப்பொன்றையும் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.மக்களை உடல் வகையாகப் பிரிக்கும்போது, அவர்களின் வயதுப்படி, உடல் தகுதி திறன்படி, ஆர்வம், ஆசை இவற்றையும் கணக்கில் கொண்டு பிரிக்கவில்லை என்பதுதான் அந்தக் குறையாகும்.இருந்தாலும் இதனை ஒரு மேன்மையான முயற்சியின் தொடக்கம் என்றே நாம் கூறலாம்.
இவ்வளவு ஆர்வத்துடன், உடலைப் பற்றி ஆய்ந்து, பகுத்துப் பிரித்துப் பார்த்த பண்பாளர்கள், உடலின் அரிய ஆற்றலையும் அருமையையும் போற்றிப் புகழ்ந்துள்ளார்கள். அதன்படி, உடலின் நலம் காண எப்படிப் பயன்படுத்தவேண்டும் எப்படிப் பயன்படுத்தக்கூடாது