பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
172
உடற்கல்வி என்றால் என்ன?9. உடல் தோரணையுடன் விளங்க, வயிற்றுத் தசைகள் நல்ல வலிமையுடன் விளங்க வேண்டும். அதற்கான பயிற்சிகளை அளித்து, உடற்கல்வி உதவ வேண்டும்.

10. இளமை பருவத்தில் மட்டும் விளையாட்டுக்களில் ஈடுபட ஊக்குவித்தால் அது மட்டும் போதாது. வயதாகும் காலத்திலும் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளிலும் விளையாட்டுக்களிலும் ஆர்வமுடன் பங்கு பெறக் கூடிய அறிவார்ந்த ஆர்வத்தை ஊட்டிவிட வேண்டும்.

சில முக்கியமான விதிகள்

உடற்கல்வித் துறையானது உற்சாகம் ஊட்டி, உடலை வளர்க்கும் உயர்ந்த பணியில் திளைக்கிறது என்றாலும், அதற்கும் பல இடையூறுகள் உண்டு. தடைக் கற்கள் எதிர்நின்று வழி மறிப்பதும் உண்டு. கொஞ்சம் கவனப்பிசகினால் கஷ்டங்கள் வருவதும் உண்டு. ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலைகள் வராது, முன்கூட்டியே தடுத்துக் கொள்வதும் புத்திசாலித்தனமாகும்.

1. விளையாட்டுக்களில் சிறப்பான பயிற்சிகள் அளிப்பதற்கு முன்பாக, மாணவர்களையும் பங்கு பெறுவோர்களையும் மருத்துவப் பரிசோதனை செய்து, அவர்கள் உடல்நிலைப் பற்றித் தெரிந்து, தெளிந்து கொள்வது நல்லது.

2. இளைஞர்களுக்கு எப்படிப்பட்ட பயிற்சிகள் தந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். எழுச்சியுடன் செய்திட முனைப்பும் காட்டுவார்கள். ஆனால் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் தருவதைத் தவிர்க்கவும்.

3. திறமை குறைந்தவர்களை, திறமை சாலிகளுடன் போட்டி போடுகிற சூழ்நிலையை