பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

உடற்கல்வி என்றால் என்ன?அது போலவே, மனித இனம் மறந்தாலும், அவர்களுடனேயே அரூபமாகத் தங்கியிருந்து, அவர்கள் உள்ளம் விரும்புகிற அபூர்வமான காரியங்களை நிறைவேற்றி வைக்கின்ற, நீடித்துழைக்கும் ஆற்றலை அளிக்கின்ற வல்லமை பெற்றதாக உடற்கல்வி உலா வந்தது. இன்றும் வருகிறது.

இன்றோ.நாகரக வாழ்க்கையில் நலிவுற்றுக்கிடக்கும் மக்களை நிலையான நலம் பெற்ற மக்களாக மாற்றி அமைக்கும் நிவாரணப் பணியிலே உடற்கல்வி உதவுகிறது.

செல்வங்கள் கோடி இருந்தாலும் அதில் சுகமில்லை. செம்மை பெற்ற தேகத்தால், கோடி சுகம் பெறலாம் என்ற கொள்கையுடன் மக்களை விழிப்புணர்வுள்ளவர்களாக ஆக்கும் பணியிலே உடற்கல்வி செழிப்புடன் செயல்பட்டு வருகிறது. அத்தகைய உரிய உடற் கல்வியைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்வோம்.


~