பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

உடற்கல்வி என்றால் என்ன?


கூடியதாக இருக்கும். முதலில் பெறுவது துன்பமாக அமைந்தால், அந்தத் துன்பம் ஆறாத துன்பமாக அமைந்துவிடும்.

அதையே முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி பேசுகிறது. முதல் நாள் வகுப்பில் மாணவர்களிடம் பேசுகிற ஒரு ஆசிரியர், சிறப்பாக நடத்தி, மாணவர்களிடம் சிறப்பிடத்தைப் பெற்றதால், அவரது மதிப்பும் மரியாதையும் பின்னும் பெருகி வளர்கிறது.

அவரே மாணவர்களிடம் முதல் வகுப்பில் போரடித்து விட்டால், அவரை காணும் மாணவர்கள், கேலி செய்திடும் போக்கை வளர்த்து விடுகிறது.

இதைத்தான் முதன்முதலாகப் பெறுகின்ற அனுபவ விதி ஆழமாக எடுத்துரைக்கின்றது.

5. அண்மை அனுபவ விதி (Law of Recency)

மிகவும் சமீப காலத்தில் ஏற்படுகிற நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் தாம், மனதில் மிகுதியாக நிற்கின்றன. அவற்றை எளிதாக நினைவு கூரமுடிகிறது. அடிக்கடி நினைத்தும் சுவைத்தும் பார்க்க முடிகிறது.

‘காயங்களை காலம் ஆற்றும்’ என்பது பழமொழி; நாளாக நாளாக, நினைவுகள் மாறிப் போகின்றன. புதிய அனுபவங்களே பொலிவு பெற்று முன்னணியில் நிற்கின்றன என்பதையே இந்தவிதிவிரித்துரைக்கிறது.

6. இயல்பாகக் கற்றல் விதி (Law of Belongingness)

மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொழுது உண்டாக்குகிறதுண்டலும்,ஏற்படுத்துகின்ற செயல்களும் இயற்கையானதாக இருந்தால், கற்றலில் தெளிவும், சுவையும் ஏற்படும்.