பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
202
உடற்கல்வி என்றால் என்ன?

 கொள்ளவும், மெருகேற்றி மேன்மைப்படுத்திக் கொள்ளவும் விழைகிறார்.உழைக்கிறார்.

என்றாலும், ஒருவருக்கு எவ்வளவு சாமர்த்தியம் உண்டு என்பதை கற்றுத் தரும் ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் கண்டு கொண்ட பிறகே, வாய்ப்புக்களை வழங்க வேண்டும். அப்பொழுதுதான், வாய்ப்பு பெறு பவரும், வல்லாளராகப் பிரகாசிக்கும் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள முடியும்.

சாமர்த்தியம் இல்லாதவருக்கு பெரிய வாய்ப்புக்களைத் தருகிற பொழுது, அவர் வீணான முறையில் விரும்பி பயிற்சி பெறுகிற பொழுது, எதிர்பார்த்தத் திறன்களை எய்த முடியாமல், வேதனைப் பட நேரிடும். அதுவே, அவர் மன எழுச்சியை மாய்த்து விடவும் கூடும். ஆகவே, தூண்டல்களிலும் துல்லியமான கணிப்பு தேவைப்படுகிறது என்கிறது இந்த துண்டல் விதி.

பயன்தரும் திறன்களின் பரிமாற்றம் (Transfer of Training)

கற்றல் விதிகளிலேயே, இந்த விதி ஒரு கம்பீரமான கொள்கையை, மக்களுக்கு அறிவிக்கிறது. அறிவூட்டுகிறது. அலங்காரமாக வழிகாட்டுகிறது.

‘ஒரு துறையில் கற்று, சிறப்பான பயிற்சிகளைச் செய்து, வளர்த்துக் கொள்கிற ஒரு திறமையானது, மற்றொரு இடத்தில் மகிமையுடன் உதவுகிறது’ என்பது தான் அந்த விதியின் கூரிய குறிப்பாகும்.

“குறிப்பிட்ட ஒரு கற்றல் அனுவத்தை ஒரு தனியாளர் பெற்றுக் கொண்டு, தன்னுள்ளே அதனை செழுமையாக வளர்த்துக் கொண்டிருக்கும் பொழுது,