பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
217
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

படுவதாகும். அத்துடன், அவர்களுக்கு உள்ள மிகுதியான ஆற்றலை வெளிப்படுத்தி விடுவதற்காகவும் விளையாடுகின்றார்கள்.

பறவைகள் தங்களது அளவிலா சக்தியின் காரணமாக, குரல் கொடுத்துக் கத்திப்பாடி, சக்தியை வெளிப்படுத்தி விடுவது போல, குழந்தைகளும் விளையாடுகிறார்கள். இயற்கையாகவே, குழந்தைகள் அதிக உடல் சக்தியை சேமித்து வைத்திருப்பதால், அதைத் தீர்ப்பதற்கு வேறு வழியில்லாது போவதால், விளையாடித் தீர்த்துக் கொள்கின்றார்கள்.

அது எப்படி இருக்கிறதென்றால், நீராவியால் ஒடுகின்ற எஞ்சின் உள்ளே தேவைக்கு அதிகமான நீராவி சேர்ந்து விட்டால், அதை வெளியே போகுமாறு (குழாயை) திறந்து விட்டு, நீராவியைக் காலி செய்து எஞ்சின் கொதிகலனை (வெடித்துப் போகாமல்) காப் பாற்றுவதுபோல, குழந்தைகளும் விளையாடி, அதி சக்தியை வெளியேற்றுகிறார்கள்.

கொதிகலனிலிருந்து, வால்வைத் திருகிவிட்டு, நீராவியை வெளியேற்றி கொதிகலனைக் காப்பாற்றுகிற பழக்கத்தை இந்தக் கொள்கை உதாரணமாகக் காட்டியிருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு

ஏன் விளையாட்டு மக்களிடம் இடம் பெறுகிறது. எப்படி உருவாகிறது என்பதையோ இது விளக்கவில்லை. அதிக சக்தி இருக்கும்பொழுதுதான் விளையாட்டு இடம் பெறுகிறது என்கிறார்கள். ஆனால், ஒருவர் களைப்படைந்து போன பிறகும்கூட கஷ்டப்பட்டு விளையாடு