பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

உடற்கல்வி என்றால் என்ன?


களை ஏற்படுத்தி, அவர்களை சந்தோஷமாக வாழச் செய்யும் சேவையில் சிறப்பாகப் பணியாற்றுகின்றது.

இந்தக் கருத்தை சிந்தையில் பதிய வைப்பதற்காக, ஜான்டுவே எனும் மேல் நாட்டறிஞர் இப்படி கூறுகிறார். “மனிதன் மனிதனாக இருப்பது அவன் விளையாடும் போதுதான்”

“விளையாட்டு என்பது துய்மையான ஆன்மிகமான செயல் என்கிறார் பிரோபெல் என்பவர்.

இவ்வாறு மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும், திருப்தியையும், மன அமைதியையும், உலக சமாதானத்தையும் தருகிற விளையாட்டானது, நல்லதையே நல்குகின்ற பொற் சுரங்கமாகும்.

இப்படிப்பட்ட விளையாட்டுக்களை, மக்கள் எதற்காக விளையாடுகிறார்கள் என்று பலர் தங்கள் கருத்துக்களைக் கூறிச் சென்றிருக்கிறார்கள். அப்படிப் பட்ட சில கொள்கைகளை இங்கே நாம் விளக்கமாகக் காண்போம்.

விளையாட்டுக் கொள்கைகள்

1. மிகுதி ஆற்றல் காெள்கை (Surplus Energy Theory)

ஜெர்மன் நாட்டுத் தத்துவஞானி ஸ்கில்லர் என்பவரும் ஆங்கில நாட்டு இயற்கைத் தத்துவவாதி. ஸ்பென்சர் என்வரும் கூறிய இக்கொள்கை, ஸ்கில்லர் ஸ்பென்சர் கொள்கை என்றே அழைக்கப்படுகிறது; அவர்களின் கூற்றுபின்வருமாறு விரித்துரைக்கப்படுகிறது.

குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்றால், அது மிருக உணர்ச்சியின் உற்சாகத்தால் (Spirit) உண்டாக்கப்