பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/268

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
266
உடற்கல்வி என்றால் என்ன?

களை செம்மாந்த மக்களாக உயர்வு பெறச் செய்ய உதவுகின்றன.

7. அனுபவங்கள் பெற வாய்ப்புக்களும், சந்தர்ப்பங்களும் வேண்டும் அல்லவா! அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களும் விளையாட்டுத் துறையில் ஏராளமாகவே இடம் பெற்றிருக்கின்றன. அங்கே பயிற்சிக்கும் பஞ்சமில்லை. வளர்ச்சிக்கும் குறைவில்லை.

8. நமது நாட்டின் கலாசாரம் மென்மையானது. மற்ற நாடுகளை விட மேன்மையானது. நெஞ்சைக் கவரும் நுண்மையானது. அத்தகைய அரிய கலாசாரப் பண்புகளை விளையாட்டுக்கள் வளர்த்து விட, நமது நாட்டின் சூழலுக்கேற்ற அமைப்புக்களுடன் பயிற்சிகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பார்களே அதுபோல, நமது நாட்டில் பல்வேறு விதமான கலாச்சாரப் பண்பாடுகள் உண்டு. அவற்றின் அருமை தெரிந்து, பெருமை புரிந்து, குழந்தைகளுக்கு பண்புகளைக் கற்றுக் கொள்ள பயிற்சியளிக்க வேண்டும்.

9. பள்ளிகளில் உள்ள வகுப்புகளில் மட்டும் இப்படிப்பட்ட பயிற்சிகள் அனைத்தையும் கற்றுத் தந்துவிட முடியாது. கூடாரம் அமைத்துக் கூட்டமாக வெளியிடங்களில் தங்கி வாழ்கிற ‘முகாம் வாழ்க்கையையும்’ (Camping) குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அதுவே சமுதாயப் பண்புகள் அனைத்திலும் அனுபவம் பெறத்தக்க வண்ணம் உதவிவிடும்.

உடற்கல்வி என்பது சுகாதாரமான சமூக வாழ்க்கையை, வலிமையான சமூக வாழ்ககையை