பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

உடற்கல்வி என்றால் என்ன?


நம்பிக்கை மூலம் உருவான கொள்கைகளே வாழ்க்கை நடத்திக் கொடுக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது. இந்த நாகரிகம் தோன்றுவதற்கான அடிப்படைக் காரணமாகவே இவை அமைந்துள்ளன.

ஒரு நாட்டிற்கு அல்லது ஒரு சமுதாயத்திற்கு உகந்த கொள்கைகள், மற்றொரு நாட்டிற்கு அல்லது சமுதாயத்திற்கு ஏற்புடைத்ததாக இருக்கவில்லை என்பதையே சரித்திரம் நமக்கு நன்றாகச் சுட்டிக் காட்டுகிறது.

அந்நாளில், ஆரிய இனத்திற்குரிய நாகரிகக் கொள்கையெல்லாம் அப்படி அப்படியே மாற்றம் பெற்றுக் கொண்டிருப்பதை, இன்று நாம் அறிந்து கொண்டிருக்கிறோமே! திராவிட கலாசாரமும் அப்படித் தானே திரிந்து விரிந்து கொண்டிருக்கிறது.

மாற்றம் என்பது இயற்கையின் சட்டமாகும்.மாறிக் கொண்டு வருவது மனிதர்களுக்குரிய பண்பும் ஆகும். இன்று உண்மையாகத் தெரியும். உண்மைக் கருத்துக்கள் நன்மை தருபவையாக விளங்கினாலும், நாளைய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாமற் போனாலும் அது ஆச்சரியமாக இருக்காது. ஏனெனில் இதுவே இயற்கைத் தத்துவமாக இருக்கிறது.

கலாசாரம், நாகரிகம் பெறுகிற மாற்றங்களைப் போலவே, கல்வித்துறையிலும் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அரசியலில், சமூக அமைப்பில், பொருளாதாரத்தில், நன்னெறிக் கொள்கையில், மதக் கோட்பாடுகளில், மரபுகளில் மாற்றம் கட்டாயம் நிகழ்ந்து தானே ஆக வேண்டும்!