பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


(61)1. கைகளை பக்கவாட்டில் விரித்து முழு அளவு முழங்கால்களை மடக்கி நில்.

2. கால்களை விரித்துக் குதித்து நின்று, கால்

களுக்கு இடையில் கைகளை வேகமாக வீசு.

(Swing)

3.முன்மாதிரியே நில். .

4.இயல்பாக நிமிர்ந்து நில்.

(63 1.குதிகால் பட முழுவதுமாகக் குந்தி) கால் களுக்கு முன்னுல் கைகளைத் தரையில் வைத்து உட்கார்.

2. சற்று முன்புறமாகச் சாய்ந்து (Leaning) கால்களை பின் புறமாக நீட்டு.

3. முன்மாதிரியே நில்.

4. இயல்பாக நிமிர்ந்து நில்.

(64) 1.கைகளை முன்புறமாக நீட்டி (கற்பனை நாற் காலியில் அமரும் பாவனை) முழங்கால்களை அரை அளவு மடித்துக் குந்து.

2.கைகளை பக்கவாட்டில் விரித்து முழுதுமாக உட்கார்.

3. முன் மாதிரியே இரு.

4.இயல்பாக நிமிர்ந்து நில்.

(65)1.கைகளைப் பக்கவாட்டில் விரித்து கால்களை விரித்துக் குதித்து நில்.

2.நெஞ்சுக்கு முன்னே கைகள் குறுக்கு நெடுக் காகவும் கால்கள் குறுக்கு நெடுக்காக வரு வது போலவும் குதித்து தில்.