பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 டாக்டர் நவராஜ் செல்லையா உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் (Weight Training) வாழ்க்கையின் மேன்மையை வளம் பெற வைக்கின்ற வழிமுறைகளை, இரண்டு விதமாகச் செய்வது மக்கள் இயல்பு ஒன்று நல்ல தனம். மற்றொன்று கள்ளத்தனம். கள்ளத்தனமான செயல்கள் செய்வது எளிது. நல்லவிதமான செயல்கள் புரிவது கஷ்டம். இப்போது ஒரு புதுக் குழப்பம் வந்திருக்குமே! நல்ல செயல் என்றால் என்ன? கள்ளச் செயல் என்றால் என்ன? விளக்க முடியாத கேள்வி. நல்ல காரியங்களை நன்மை என்பர். கள்ளக் காரியங்களை தீமை என்பர். பொதுவான விளக்கம். இந்த நன்மை, தீமை என்ற இரண்டு சொற்களுக்கு மக்கள் எல்லோரும் விதவிதமான அர்த்தங்களை விவரித்து உரைப்பார்கள். ஆனால் நாம் இங்கே பெறுகிற விளக்கம் தருகிற சுருக்கம் இதுதான். உடல் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் உதவுகின்ற காரியங்கள் எல்லாமே நல்ல காரியங்கள்.