பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா ,1 1 அதன் பிறகே தொடங்க வேண்டும். தரமான சாதனங்களே பயிற்சிகளுக்கு ஏற்றனவாகும். 4. உதவிக்கு ஒருவர் இல்லாமல், தனிமையில் பயிற்சிகளைத் தொடர்வது நல்லதல்ல. ஆரம்பப் பயிற்சியாளர்கள் இந்த விதியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். 5. புழுதியான தரையில் பயிற்சி செய்யக்கூடாது. பாய்கள் இருந்தால், விரித்து, அதன்மேல் நின்று செய்யலாம். 6. ஆரம்ப வேகத்தில் நிறைய எடைகளை வைத்துக் கொண்டு பயிற்சி செய்யக்கூடாது. எவ்வளவு தூக்க முடியுமோ முதலில் அது போதும். மீறி செய்தால் உடல் வலி ஏற்படும். நாட்கள் செல்லச் செல்ல, சக்தி அதிகமாக வர வர, அதிக எடைகளைக் கொண்டு, பயிற்சியைத் தொடரலாம். அப்பொழுது விரைவில் பயன்கள் கிடைக்கும் 7. வயது, எடை, பயிற்சி, அனுபவம், செய்கிற தொழில், வாழ்க்கை வசதி நிலை இவைகளும் பயிற்சிக்கான எடைகளை நிர்ணயிக்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். 8. ஒரு பயிற்சிக்கு இத்தனை முறை தூக்குதல் என்ற வரம்பு வைத்துக் கொண்டபின், அதை மீறக்கூடாது. ஒருமுறை 10 தடவை என்றும், அதுபோல் மூன்று சுற்றும் செய்தல் வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால், அப்படிச் செய்வதுதான், உடலுக்கு அழகை விரைவில் வரவழைக்கும்.