பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் என்று இந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறேன். உடலுக்கு சுகம் தருகிற பயிற்சிகள் என்றே எழுதியிருக்கலாம். ஏனென்றால், அழகு என்றாலே சுகம் என்றுதான் அர்த்தம். சுகம் எப்போது கிடைக்கும்? உடல் என்றாலே பொன் என்றும் பொருள் என்றும் தான் அர்த்தம். சுகம் எங்கே கிடைக்கும் பொன்னைப் போற்றுவது போல, பொருளைப் பத்திரமாகப் பாதுகாத்துக் காப்பதுபோல, உடலைப் போற்றும் போதும் பாதுகாக்கும் போதும் சுகம் கிடைக்கிறது. அழகு கொழிக்கிறது. * * = பயிற்சி செய்தால்தான் அழகு வருமா? சுகம் தருமா? பயிற்சி செய்யாமல் இருப்பவர்கள் எல்லாம் அழகோடும் சுகத்தோடும் வாழ்கிறார்களே? இப்படி நினைத்துத்தான் பலர் ஏமாந்து போகின்றனர். பயிற்சி செய்யாதவர்கள் உடல்நலம் பையப்பைய குறைந்து கொண்டே வருகிறது. ஒரு காலக் கட்டத்தில் உடலுக்கு பாதிப்பு ஏற்படுகிறபோது, அவர்களால் உடனே குணமாகிட முடிவதில்லை. குணம் ஏற்பட்டாலும், பூரண குணம் பெற, பழைய நிலையை அடைய பல ஆண்டுகள் ஆகின்றன. உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கோ, குறைகிற உடல் சக்தியை உடனே நிரப்பிக் கொள்ள முடியும். நலிவு ஏற்பட்டாலும் உடனே நிவர்த்தி செய்திட முடியும். எந்தக் காரியம் செய்தாலும், இதயம் ஒன்றி முழு மூச்சாய் பணியாற்றிட முடியும். பராமரிக்க முடியும். அத்துடன் நிமிர்ந்த உடல், நேர் கொண்ட பார்வை, எதையும் ஏற்றுக் கொள்கிற மனோபக்குவம், வாழ்வை சந்திக்கும் வலிமை செயல்களிலே திறமை என்று பலப்பல