பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் தவராஜ் செல்லையா? (BS எடை ஏந்தியை வைத்திருக்கும் இடத்திற்கு வந்து அதன் முன்பாக நிமிர்ந்து திற்கவும். தரைக்கு இணையாக இருப்பது போல உடலை முன்புறமாக வளைத்து நின்று எடை ஏந்தியைத் துக்கித் தொடைக்கு அருகில் கொண்டு வந்து வைக்கவும், இருகைகளும் இறக்கைகள் போல முன்புறமாக விரிந்து இருக்கவும். (படம் பார்க்க) வளைந்து நிற்கும் நிலையிலிருந்து மேலும் குனிவதோ அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்வதோ கூடாது. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு எடை எந்தியைக் கீழிறக்கிக் கொண்டு வந்து, கணுக்கால் பக்கம் நோக்கிச் சென்று கால்களை தொடைப்பகுதிகளை அடிவயிற்றை நெஞ்சு தாழ்வாய் முதலியவற்றைத் தொடுவது போல கூற்றிச் சுழற்றி வரவும், (படம் பாருங்கள்) ஒரு முழுச் சுற்று கற்றி வருவதுபோல, பயிற்சி அமைய வேண்டும். எக் காரணத்தை முன்னிட்டும் எடை இந்தியால் தரையைத் தொடக்கூடாது. பயிற்சி ஆரம்பிக்கும் பொழுதே நன்றாக மூச்சிழுத்துக் கொண்டுதால் தொடங்க வேண்டும். ஒரு கற்றி கற்று வந்ததும் மூச்சை விட்டு லிட்டு, பிறகு மூச்சிழுத்துத் தொடங்க வேண்டும். முடிந்தவரை முழங்கால்களை மடக்கக்கூடாது. 10 தடவைகள், 3 சுற்றுக்கள். சுற்றுகளுக்கிடையே ஒரு நிமிடம் ஒய்வு தரவும்.