பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

48




உதாரணமாக, உடல் அமைப்பை மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவார்கள். சிறிய அமைப்பு (Small Frame) நடுத்தர அமைப்பு (Medium) பெரிய அமைப்பு (Large).

ஒரு பெண் 5 அடி 6 அங்குலம் இருக்கிறார் என்பதாக வைத்துக் கொள்வோம். அவர் உடல் அமைப்பு சிறியதாக இருந்தால் 127 பவுண்டு எடையும், பெரியதாக இருந்தால் 146 பவுண்டு எடையும் இருக்க வேண்டும் என்று கணித்திருக்கிறார்கள்.

அதாவது வயது ஒன்று தான். உயர அளவும் ஒன்று தான். ஆனால் உடல் அமைப்பு வித்தியாசப்படும் போது அங்கே எடையும் வித்தியாசப்படுகிறது.

22லிருந்து 25 வயது வரை உள்ள ஆண் பெண் இருவருக்கும் இவ்வளவு எடை தான் இருக்கலாம் என்று அமெரிக்க இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி ஒன்று மேற்காணும் குறிப்பை வடித்திருக்கிறது.

கொஞ்சம் வயதானவர்கள் அவரவருக்குரிய உயரத்திற்குரிய எடை அமைப்பிலிருந்தே 10 முதல் 20 பவுண்டு வித்தியாசப்படலாம். இதற்கு மேல், எடை அதிகம் போகாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம்.

உங்கள் உயரத்தை அளக்கும் பொழுது செருப்பு அணியாமலும், எடை பார்க்கும் பொழுது அதிகக் கனமில்லாத உடைகளையணிந்து கொண்டும் பார்ப்பது நல்லது.

இளமையில் உள்ள எடைக்கும், வயதானவர்களுக்குரிய உடல் எடைக்கும் நாளாக நாளாக எப்படி ஏறுமுகம்