பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்மதி - நிம்மதி ஆடுகின்ற மாமயில், பாடுகின்ற பூங்குயில், அழகிய பெண்ணைப்பார் ஆசை மனமோகனம் வீசுதென்றல் வாகனம் பேசிடும் கண்ணைப்பார்! தராதரம் யாவையும் எண்ணிப் பார்; எனைக் கொஞ்சம் பாராய் சிநேகமாய், உனக் கின்பம் தாரேன் அமோகமாய், காதல் உணர்வுதான் நிம்மதி - சம்மதி காணும் உலகில்நாம் இருவரும் சதிபதி காலம் தவறாமல் சுபகாரியம் செய்குவோம் கருணை புரிவாய்! (ஆடுகின்ற) காதலன் எதிலே வருவான்? வருவார் வருவாரென்று பார்த்தேன் வழிமேல் விழிவைத்து உடல் வேர்த்தேன். ஒருவார மாகியும் வரக்காணேன் சகியே! ஒரு நிமிஷம் கூட இனிமேல் சகியேன். - ஸ்வாமி வருவார் வருவாரென்று பார்த்தேன்! பொம்பளை மேலே ஆசைப்பட்டவன் எதிலே வருவாண்டி? புகை நுழையாத இடத்தில்கூட புகுந்து வருவாண்டி! வித்தாரக் கள்ளிக்கு ஆசைப்பட்டவன் எதிலே வருவாண்டி? கத்தாழை முள்ளிலே பொத்தல் பண்ணி அதிலே வருவாண்டி! சிங்காரக் கள்ளிக்கு ஆசைப்பட்டவன் எதிலே வருவாண்டி? சீரகத்தில் பொத்தல் பண்ணி அதிலே வருவாண்டி! மேனா மினுக்கிக்கு ஆசைப்பட்டவன் எதிலே வருவாண்டி? - அவன் ஆலம் விழுதிலே பொத்தல் பண்ணி அதிலே வருவாண்டி! - நீதிபதி 81.