பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல பெண்மணி! நல்ல பெண்மணி! - மிக நல்ல பெண்மணி - தாய் நாட்டு நாகரீகம் பேணி தடப்பவள் எவளோ? அவளே! (நல்ல) வெள்ளி முளைத்துச் சேவல் கோழி அடிவிடும் வேளை - தன் மேனி குளித்து அழுக்கு நீங்கத் துவைக்கனும் சேலை. பள்ளிக்கூடம் செல்ல வேணும் காலையும் மாலை - நல்ல பழக்க வழக்கத்தோடு நூலைப் படிப்பவள் எவளோ? அவளே! (நல்ல) அம்மாவுக்கு உதவியாக ஆக்கிப் பழகனும் - சோ றாக்கிப் பழகனும்: அடுப்பை மூட்டிக் கூட்டிப் பெருக்கி இடுப்பை வளைக்கணும்; அப்பா சொல்லும் அறநெறியில் தப்பா திருக்கணும் - தினம் அச்சம் பயிர்ப்பு மடமை நாணம் அமைந்தவள் எவளோ? அவளே! (நல்ல) புகுத்த இடத்தில் பிறந்த இடத்தைப் புகழக் கூடாது: புருஷனோடு வம்புச் சண்டை போடக் கூடாது இகழ்ச்சியாக எவரையுமே எண்ணக் கூடாது - பன ஏற்றத்தில் இறுமாந்திடாது இருப்பவள் எவளோ? அவளே! (நல்ல) போட்டு வைத்துக் கோலங்கூடப் போடத் தெரியணும் - புத்தி புகட்டும் நாட்டுப் பாடல் கூடப் பாடத் தெரியனும் கஷ்டம் வந்த போதும் மானம் தன்னைக் காக்கனும் - தன் கணவன் சுகத்தை நாளும் பேணும் கண்மணி எவளோ? அவளே! (நல்ல) - மனமகள் 92