பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் : மாமா! ஆண் ஏமா? பெண் என்னைத் தனியா வுடவே மாட்டேன்னு - எந் தலை மேலடிச்சுச் சத்தியம் பண்ணு ஆண் எங்கப்ப னானே சத்தியம். சத்தியம். சத்தியம் இருவரும் ஏரோட்டிப் பாத்தி புடிச்சு - அதிலே நீர் பாய்ச்சி நெல்லை வெதச்சு ஊரோடு ஒண்ணாக உள்ளதெக் கொண்டு - நாம் உல்லாசமாக வாழ்வோம். - எங்கள் வீட்டு மகாலட்சுமி விவரம் புரிந்து கொள்க! பெண் ; காதிலேதாவதும் உண்டா? வைர முண்டா? கண்டதுண்டா? மோட்டார் கார்தனிலே போகிறதைக் கனவில் யார் கண்டா? நாடகம் சினிமாவும் உண்டா? ஒரு நாளாவது உங்களுடன் நான் வந்த துண்டா? (போடாத) ஆண் : விபரம் புரிஞ்சு கொள்ளணும் மனுஷன் கொன்னா விபரம் புரிஞ்சு கொள்ளணும்! - வேலையத்த பணக்காரங்க பிள்ளைங்க போலே காரியம் இல்லாமெ நேரம் போக்கா தேன்னா (விபரம்} சிலுக்குப் புடவை கேக்குதா? - இல்லேன்னா ஒடம்பு குலுக்கி நடக்கி லேங்குதா? - காதிரண்டும் சீமைக் கம்மலும் கேக்குதா? - போடாமப் போனாச் செவிடாப் போறேங்குதா? - தாலியுள்ள கழுத்து அட்டிகை இல்லாட்டிச் சுளுக்கிக்கிறேனுங்குதா? காப்பில்லாக் கை சோத்தை ஆக்க மாட்டேங்குதா? காசு கொடுத்து வாங்கி ஆசையோடு மூக்கில் - பேசரி போடாட்டி வாசம் புடிக்காதா? (விபரம்) - பைத்தியகாரன் 97