பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சல்சலோன்னு சவாரி! ஒரு ஊரில் ஒரு ராஜா, ஒரு ராணி! உன்னைப்போல் அவங்களுக்கும் ஒரு பிள்ளை - அதைக் கண்ணை மூடித் துங்கச் சொன்னா கதை சொல்லுன்னு கேக்கும். காலாகாலம் சாப்பிடச் சொன்னா கதை சொல்லுன்னு கேக்கும் அவங்கம்மா சும்மா கதைகள் சொல்லி அலுத்துப் போய்விட்டாள். அப்படி இருக்கும்போது ராஜா வேட்டைக்குப் புறப்பட்டார். ஏம்மா? நாட்டு மக்கள் போட்ட பயிரைக் காட்டு மிருகம் அழிச்சுதாம் ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு ஆளையும் கூடக் கடிச்சுதாம். அப்புறம்? உடனே ராஜா பட்டத்துக் குதிரையைக் கொண்டு வரச்சொல்லி பாஞ்சார் மேலே பாஞ்சு........... o சல் சலோன்னு சவாரி விட்டார் டக் டக் டக்! ராஜா சல்சலோன்னு சவாரி விட்டார் டக் டக் டக் சவுக்காலடிச்சு லகானை இழுத்துக் குதிரையை, வுட்டாரு ராஜா சல்சலோன்னு சவாரி விட்டார் டக் டக் டக் கல்லும் கரடும் நிறைந்த வழியில் கேலப் வுட்டாரு கல்லும் கரடும் நிறைந்த வழியில் கேலப் வுட்டாரு கத்தியெ உருவிக் கரம்பிடிச்சுக் காட்டில் நுழைஞ்சாரு - ராஜா சல்சலோனு சவாரி வுட்டார் டக் டக் டக் டக் வில்லையெடுத்துஅம்பைப் பூட்டி மழையாப் பொழிஞ்சாரு விலங்குகளெல்லாம் வெருண்டோடச் சுழன்று வந்தாரு இடது காலுக்குச் சிமிட்டாக் கொடுத்து ஈன்னு சொன்னாரு இடது காலுக்குச் சிமிட்டாக் கொடுத்து ஈன்னு சொன்னாரு இறகில்லாத பறவையைப் போலே குதிரை பறந்தது பார் - ராஜா, சல்சலோன்னு சவாரி வுட்டார் டக் டக் டக் டக்i 127