பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக்கொரு நல்லதம்பி ஆழி நீங்கி வானின் மீது ஆதவன் எழுந்தான் காணிர், கோழி உல கெல்லாம் வாழ வென்று கூவி யழைக்குது கேளீர்! பார் முழுதும் ஏர்முனையிலே - உழவன் பாட்டினிலே கொண்டாட்டம் போடுது இந்த (பார்) -- நல்ல தம்பி கதிரோன் உதயம் பூதலம் புகழ் ஜோதி நிலவும் ஆதவா நீ வா! சீதக் கடலும் துயிலும் நீங்கிச் சேவல் கூவின; தீதுறும் அஞ்ஞான மார்க்கத் திரையும் நீங்கவே... ஒதரும் மெய்ஞ்ஞான மார்க்க உணர்வும் ஓங்கவே... காவின் மரங்கள் காய்த்துத் தழைக்க பூவின் கொடி, புல் பூண்டு செழிக்க, பாவினம் பயிர் பறவை ஒலிக்க, ஆவினம் அம்மா வென் றழைக்க: ஆதவா நீ வா! பூதலம் புகழ் ஜோதி நிலவும் ஆதவா நீ வா! - கண்ணகி இயற்கையெனும் தொழிலாளி: இயற்கை யினாலே உலகெலாம் இயங்கும் செயற்கையிலே சிறப்பெலாம் துலங்கும்! ஆதவனாம் தொழிலாளி காலையம் போதினிலே வந்தான் பாரீர் ஆதாரம் ஆகவே அரும்பணி செய்வோம் சோதரர் யாவரும் வாரீரே! 3. 1.