பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே சொர்க்கம்? தொகையறா அந்தரத்தில் நீர் பாய்ச்சித் தரு வளர்த்தே விந்தை மிகு கனி கொள்வார் விநயம் போலாம் இந்த உலகம் விட்டிறந்த பின்னே இன்புறும் சொர்க்கமெனில் ஏமாந்து போவீரே! (எல்லோரும்) எங்கே சொர்க்கம் எங்கே சொர்க்கம் என்றே தேடுlர் ஏமாந்தே ஒடுlர் - அது அங்கே இல்லை இங்கே உண்டு அன்பால் நாடுவீர் ஒன்றாய்க் கூடுவீர்!! (எல்லோரும்) தன்னந் தனியே தவம் புரிந்தே சமாதி யாகப் போlரா? சமுசாரம் பிள்ளை சுற்றத் தோடு வாழ்ந்து கொஞ்ச வாரீரா? இங்கு ១៤៣ក្៣? அங்கு போlரா? உள்ளம் தேlரா? (எங்கே சொர்க்கம்) இங்கே இல்லை அங்கே உண்டு என்றே சொல்லுவார் - அது அங்கே இல்லை இங்கே உண்டு அன்பால் நாடு வீர்; ஒன்றாய்க் கூடுவீர்! (எங்கே சொர்க்கம்) பஞ்சம் இல்லா நாடு - உயர் மிஞ்சும் வயலும் தோட்டங் காடும் மேன்மையான சொர்க்கந்தான்! - நெஞ்சில் ஈரம், நேசம் அன்பு உள்ளார் காண்பது சொர்க்கம்! - அது இல்லார் காண்பது நரகம்! - நினைவை மொய்க்கும் நிம்மதியே சொர்க்கம் - அது நீதியின் பக்கம் இனி. (எங்கே சொர்க்கம்) நூலோர் சொல்லும் சொர்க்கம் மேலோகந்தான் - அன்பின் மேலோர் கண்ட சொர்க்கம் பூலோகந்தான்! 148