பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனவந்தன் காசுக்கு சலாங் கிலாம் போடாதுங்க! சாமியார் வேடமிட்டு - கை சாப்பாட்டைத் தேடிக் கிட்டு சத்திரத்துக் கோடாதுங்க - கால் சத்திரத்துக் கோடாதுங்க! - கை (சும்மா) - நல்ல காலம் நமப் பார்வதி பதே! நமப் பார்வதி பதே - ஒம் நமப் பார்வதி பதே! பிள்ளையே இல்லேன்னா கதி மோட்சம் இல்லேன்னு பிறரிடம் ஸ்வீகாரம் பெறுவார்கள் முன்னால் பின்னாலே பிள்ளைகள் பிறந்தாலோ ஸ்வீகாரம் சம்போ மகாதேவா அம்போன்னு போகும் அட - நமப் (பார்வதி) உண்ணாத உபவாச விரதங்கள் கொள்ளுறார் ஒருசட்டி உப்பு மாவை உள்ளுக்குத் தள்ளுறார்; முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக நடக்கிறார் அரகர சம்போ மகாதேவா நமோ.... நமப் (பார்வதி) தன்சுகம் எண்ணாத தியாகிகள் சிலருண்டு தன்னலம் தேடுகிற பாவிகள் பலருண்டு! நன்மைக்குத் தீமையே செய்திடும் கூட்டம் நாயாக அலையுதே சங்கரா.... நமப் (பார்வதி) தன்வீடு போனாலும் பக்கத்து வீடுதான் சாம்பலாகக் கொள்ளி வைக்கிறான் முட்டாளு! அன்னியன் வாழ்வதைச் சகியாத படுபாவி அரகரா ஆயிடுவான் சம்போ மகாதேவா - நமப் (பார்வதி) - துய உள்ளம் 170