பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருட்டும் புரட்டும் உருட்டும் செய்து திருப்பணிகள் நடத்தி வைத்து சீமானென்றே காட்டிக்கிறவன் ஒசந்துட்டான் தில்லும் முல்லும் செய்யாம லுன் திருநாமம் செல்லிச் சொல்லி ஜீவனம் பண்ணுகிறவன் அசந்துட்டான்! - செல்வன் ஏழை இல்லாமலே செய்திடு - மனசில் சிறுசு பெரிசு பாகுபாட்டைக் கொறைச்சிடு - உந்தன் தரிசனம் எல்லோருக்கும் சரிசமமாய்க் கொடுத்திடு தெய்வம் நீ என்ற பெயரைத் தேசத்தில் நிலைநாட்டிடு! பசித்த வயித்தைப் பட்டினி போடாதே - பசியாத வயித்தில் பாலும் சோத்தை அடைச்சு விடாதே! (திருப்பதி) - மஞ்சள் மகிமை ஆனந்தம் இங்கே: ஆனந்தம் இங்கே இருக்குது பாருங்க! கொஞ்சம் பாருங்க கண்ணாலே பாருங்க - அது வேறெங்கோ இருக்குதுன்னு தேடாதீங்க (ஆனந்தம்) கும்பிடு போடு - ஊஹூம் குனிஞ்சு கும்பிடு போடு தாம்தகிட நிமிர்ந்து வளைஞ்சு நெளிஞ்சு வந்து நடந்து சுழண்டு எட்டி (கும்பிடு) ஜம்புடு பண்ணு பங்கிடு பண்ணி ஜம்புடு பண்ணு ஆ ஆ சரியாப் போச்சு தாங்கு தின்னுதக - தாங்கு தின்னுதக தினுதினு தக - தினு தினு தக - திமி திமி தணங்குதக - தணங்குதக - தப்ளாங்குதக (ஆனந்தம்) - செல்லப்பிள்ளை 182