பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரைக்கலையில் புதுமை படைத்த புரட்சி நடிகர் வருவார் - அப்பாவைப் பார்க்க: - அப் 'பாவை'ப் பார்க்க: யாரைக் காண - யாருடைய காட்சிக்காகத் தமிழக மக்கள் பலர் தவித்துத் தவம் கிடந்தார்களோ, அந்தத் தலைவர்கள் எல்லாரும் எங்கள் வீட்டுக்கு வந்து காட்சிக்கு எளியவராய் இருந்தார்கள்! எதனால்? எங்களுக்கு வாய்த்த எங்கள் தந்தையார் தயவால் அவர் பெற்றிருந்த ஆற்றலால் ஈட்டியிருந்த புகழால்: இத்தகைய பெருமையும் ஆற்றலும் வாய்ந்த எங்கள் தந்தையார் எங்களுக்கு விட்டுச் சென்ற செல்வங்களில் எல்லாம் தலைசான்ற செல்வம் - அவர் அளித்துவிட்டுச் சென்றுள்ள இசைத்தமிழ்ப் பாக்களே! அவை எங்கட்கு மட்டுமே விட்டுச் சென்ற செல்வம் அல்ல; தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதற்குமாக விட்டுச் சென்ற தனிப்பெருஞ் செல்வமது. அந்தக் கவிதைச் செல்வத்தையெல்லாம் ஒருங்கு திரட்டித் தமிழ் மக்களுக்குத் தந்துவிட விரும்பினோம். 'தமிழ் மக்களே! எங்கள் தந்தை - உங்கள் உடுலை நாராயண கவி தமிழுக்கும் தமிழ் மக்களாகிய உங்களுக்கும் தந்துவிட்டுப் போன இசைத் தமிழ்ச் செல்வங்கள் இவை இந்தாருங்கள்' என்று தமிழ் கூறும் நல்லுலகுக்கு அப்படியே எடுத்துக் கொடுத்துவிட விரும்பினோம்! அதற்காகத் தந்தையாருடன் தொடர்புடைய பலருடன் தொடர்பு கொண்டு பாடல்களைத் திரட்டினோம். அப்படியும் எல்லாப் பாடல்களையும் தந்துவிட இயலவில்லை எங்களால் - இன்னும் சில பாடல்கள் கிட்டவில்லை. எடுத்துக் காட்டாக ஒன்று சொல்லலாம். கலைவாணர் அவர்களுக்கு எம் தந்தையார் எழுதித் தந்த கிந்தனார் காலட்சேபக் கதைப்பாட்டு இரண்டு மணி நேர அளவிற்கு வரக்கூடியதுஅந்த நெடும் பாடலிலிருந்து ஒரு சிறு பகுதியே நல்லதம்பி திரைப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. முழுப்பகுதியினையும் கலைவாணர் குடும்பத்தினரிடமிருந்து பெறுவதற்குக் கடிதத் தொடர்பு கொண்டும் பலன் கிட்டவில்லை. - இயன்ற அளவு கிடைத்த பாடல்களையெல்லாம் தொகுத்து வெளியிட தஞ்சை, திருவையாறு அரசர் தமிழ்க்கல்லூரி மாணவராயிருந்த காலத்திலேயே அக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியன்மார்களால் இணைப்பேராசிரியரென்று நற்சான்று வழங்கப்பட்ட நன்மாணாக்கரும், xi