பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவடிச் சிந்து நாதப் பிரும்ம வினோதபாக சங் கீதத் தோர் அபிமானி - நமது நண்பனாகிய சீனி - வாசன் நானிலம் புகழ் மானி - எந்த நாளுமே நீள்தயாளமே நிறை நாநலந்தரும் சீனி. கோதரும் இளங்கோதைமார் மையல் கொண்டிடும், சிலைமாரன் - தரும் கொடைக்கு மேலதிகாரன் - திரு கொத்தமங்கல ஊரன் - எனைக் கூடியே விளையாடியும் சுகம் கொடுக்கும் ரூப சிங்காரன். பொன்னியும் கலைக்கன்னியும் நடம் புரியும் நேர்தடந் தோளன் - மறை புகலு வார் மரபாளன் - மிகு புண்ய மீன்ற குணாளன் - எனைப் போற்றிப் போற்றிப் பாராட்டியே வைத்து பூசிக்கும் மணவாளன். கன்னல் சூழ் உடுமலைப்பதி - தமிழ்க் கவி மாலை என்றி.டின் என்றும் காமுறும் திருமாலை - நிகர் கெளரவன் இன்று மாலை - என்னைக் கண்டு பேசிய விந்தையானது கனவிலும் செய்யும் மாலை (நாத) (தம் மேல் சிந்து பாடுக என வேண்டிய கொத்தமங்கலம் சீனு மேல் கவிராயர் பாடியது.) 203