பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கே கஞ்சி உண்டுங்க - சிலர்க்குக் காபி உண்டுங்க, களியும் உண்டுங்க - சோறு கறியும் உண்டுங்க இன்னங் கேளுங்க அங்கே, படிச்சவங்க படி யாதவங்க படிக்கப் பலகலா சாலையதும் உண்டுங்க! சாப்பிடச் சொல்லிப் பிள்ளைகளைப் பெத்தெடுத்தவங்க போலப் பிரியமுங் காட்டுறாங்க நம்புங்க! விசில் அடிக்கடி ஊதுவாங்க - அதன்படி ஆசராகி நிக்கோணுங்க - அங்கே உடைப்பஞ்சம் ஏதுங்க? உணவு ரேஷன் ஏதுங்க? ஒடம்புக்கு ஏதாவதுன்னாங்க - டாக்டர் ஒடியாந்துடுவாங்க! கூலிக்குப் போகும் வேலைத் திண்டாட்டம் குறையே இல்லீங்க - கும்பிடக் கோயிலு மில்லீங்க! - அது ஒரு கொறையா சொல்லுங்க? - இட்ட சோலியப் பாக்கணும் மாலையானவுடன் துங்கவுஞ்சொல்றாங்க - மனத்தையும் சுத்தப் படுத்துறாங்க! (ஜெயிலுக்கு) - பைத்தியகாரன் செப்படி - பித்தலாட்டம்! மாயமாகிய ஜாலந்தனிலே வந்த மாது நானே - உடனே மாறும் எந்தன் உருவமாகுமே. ஆசையாலெனை யாரும் தொட்டால் அருவமாகுந்தானே - ஆனால் ஆடல்பாடல் எல்லாம் செய்குவேன் (மாய) 208