பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுவின் தீமை குடிச்சுப் பழகனும் குடிச்சுப் பழகனும்! படிச்சுப் படிச்சுச் சொல்லுறாங்கோ பாழுங் கள்ளை நீக்கிப் - பாலைக் (குடி) பாலு வாங்கப் பணமில்லே? டியைக் குடிச்சுக்கோ! டியும் கெடுதலின்னு தெரிஞ்சா? மோரைக் குடிச்சுக்கோ! மோரும் நமக்குக் கிடைக்கலே? நீராகாரம் இருக்கவே இருக்கு (குடி) - நல்லதம்பி மரங்களுக்கு விடுதலை! விடுதலை விடுதலை விடுதலை!!! உடலை வாட்டும் நோய்களுக்கும் தலைவலிக்கும் இன்று முதல் (விடு) பகலும் இரவும் தொங்கிக் கிடந்த பல்லாக் களுக்கும் விடுதலை! பயந்து பயந்து ஏறி இறங்கும் பாட்டாளிக்கும் விடுதலை! ஜெகத்தை வெறுக்கச் செய்யும் கஞ்சாச் சிலும்பி களுக்கும் விடுதலை! முகத்தை மூடிக் குடிக்கும் கள்ளு மொந்தை களுக்கும் விடுதலை! பனை மரத்துக்கும் விடுதலை! தென்னை மரத்துக்கும் விடுதலை! பனை மரத்துக்கும் தென்னை மரத்துக்கும் ஈச்ச மரத்துக்கும் விடுதலை! விடுதலை! விடுதலை!! விடுதலை!!! - நல்ல தம்பி 241