பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சும்மா இருந்தாச் சோத்துக்கு நஷ்டம்! சும்மா யிருந்தா சோத்துக்கு நஷ்டம்; சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்! பல்லவி உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா மச்சான்! ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா! படிச்ச வேலைக்குப் பலபேர் நோட்டம்! பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்! கொடுத்த வேலையை முடிப்பது சிரேஷ்டம்! குடிசைத் தொழிலில் வேணும் நாட்டம் உண்மையோடு உழைக்கோணும்! தானே தன்னன்னா! - மச்சான்! ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா! அப்பன் தொழிலை அவனது பிள்ளை, சொப்பனத் திலுமே நினைப்பது மில்லை; இப்படிச் செய்வத னாலே தொல்லை ஏற்படும் என்றால் கேட்பது மில்லை! (உண்மையோடு) தெரிஞ்ச தொழிலைச் செய்தாலே தானே தன்னன்னா! - மச்சான்! தாழ்வுமில்லை அதனாலே தானே தன்னன்னா! வேலை வேலையென்று ஒல மிட்டழுதா ஆளைத் தேடியது வீட்டுக்கு வருதா? மூளையோடு நல்ல முயற்சியு மிருந்தா வேலைக்கேது பஞ்சம்? விவரம் புரியதா? பாடுபட்டால் பலனுண்டு! தானே தன்னன்னா மச்சான்! பஞ்சம் தீர்க்க வழியுண்டு தானே தன்னன்னா! 266