பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னார் என்று கண்டுபிடி பல்லவி கண்ணே கண்ணே உன்னைத்தொடும் ஆளை யிப்போது இன்னாருன்னு கண்டு பிடிக்க வேணுந் தப்பாது கருத்து நிலை மாறாமே கட்ட அவிழ்த்துப் பாக்காமே கண்ணே கண்ணே உன்னைத்தொடும் ஆளை யிப்போது இன்னாருன்னு கண்டு பிடிக்க வேணுந் தப்பாது!! சரணங்கள் மழையிருட்டில் கிளை தவறிப் பாய்ந்திடாது மந்தி! மனுஷனுக்குத் தேவை யந்த நிதானந்தான் தம்பி! விழியிருந்தும் குழி தனிலே வீழ்வார் தம்மைப் போலே வழி தவறிப் போகாமே நடந்து செல்லு மேலே! கருத்தின் நிலை மாறாமே கட்டே அவிழ்த்துப் பாக்காமே கருத்தின் நிலை மாறாமே கட்டே அவிழ்த்துப் பாக்காமே (கண்ணே..) முன்னால் வந்து தொட்டாக் கிட்ட முடிக்கிப் புடிச்சுக்கோ பின்னால் தட்டும் பேரைச் சொல்லிக் கண்ணேத் திறந்துக்கோ (முன்னால்) கருத்தின் நிலை மாறாமே கட்டே அவிழ்த்துப் பாக்காமே (கண்ணே) ஆட்டத்திலே போட்டியிடு! கூட்டுறவைத் தேடு! 268