பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடை யலங்காரம் கண்டேன்! பல்லவி நடையலங்காரம் கண்டேன் அன்னப் பெடையும் பின்னடையும் பொற் கொடி யிவள் மலரடி (நடை) அதுபல்லவி நடையலங்காரம் நளின சிங்காரம் இடையலங்காரம் பின்னல் நடையலங்காரி (நடை) சரனம் தேடக் கிடைத்திடாத் தெய்வீக மருந்து தெரிசனம் கண்கள் பெறும் விருந்து ஆடிடும் மாமயில் ஆகும் மின்னாள் - ஒயில் ஆனந்தப் பரவசக் கானம் தரும் குயில் பாலென மொழி பகரெழில் சுகமருவு சா ரீர வதன மதியின் மாண்பாகும் நீள் விழியினலங்காரம் நிலா நிகர் ஒய்யாரம் நிலவிய சிங்காரம் தனையுமிது நேரம் காண மோகமீறி - எனதுளம் பொன்னாள் வடிவின் பின்னே செல்லுது என்னே புதுமை! (நடை) - குபேரகுசேலா 41