பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பாலே தேடிய செல்வம்! அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் - தங்கம்! அம்புவியின் மீது நான் அணி பெரும் ஒரங்கம்! (அன்பாலே) இன்பம் தரும் தேனிலவு.... இதற்குண்டோ ஆதங்கம்? ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்! (அன்பாலே) உடல் நான் அதில் உளம் நீயென உறவு கொண்டோம் நேர்மையால் கடல் நிலவாய்க் காட்சியிலே கலந்து நின்றோம் ப்ரேமையால் (அன்பாலே) புடம் நிறை மாற்ற றியாப் பொன்னே சொல் ஏன் ஜாலம்? போனால் வராது இது போலே காலம் இனி. (அன்பாலே) - தெய்வப்பிறவி மாலைசூட வந்தேன் மாலைசூட வந்தேன் மல்லிகா மாசில் குசேலன் உந்தன் நேசன் மாமண சீலமிகுந்திடும் வானோர்க்கும் சிறந்து தோன்றும் ஜெனனம் பலகோடியில் தேர்ந்திடத் தகுந்தோன் மால்பெரும் மானிடனாகவும் பிறந்தேன் மதிகுலாவு புவி மாமறையோன் காதலின் கலையைக் கருத்துணர் பூமான் கன தன பாக்கியம் தனிலும் சீமான் ஆதரவாய் மணம் அடைந்திடுங் கோமான் அழகு வாய்ந்த திருமாதுனையே 54 (DITEುಖ) . (மாலை) (மாலை) - குபேரகுசேலா