பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட வந்த ஒடம் மழையைத் தாங்கும் முகில் குழலைத் தாங்கும் - உந்தன் வதனம் போன்றது சந்த்ரோதயம்! - புருவச் சிலையைத் தாங்கி துதல் பிறையைத் தாங்கி - இதழ் பவளந் தாங்கி நின்ற ஒவியம் - நீ (மழையை) அழகைத் தாங்கி வந்த பீடமோ? - மாறன் அணியும் ரத்ன மணிக் கிரீடமோ - காதல் கலையை யோதும் பள்ளிக் கூடமோ? - இன்பக் கடலில் ஆடவந்த ஒடமோ! (வானில் மழையைத்) உந்தன் - விழியைக் கண்டு மான்கள் அடவிக்குள் மறைந்து சென்றதோ - பல்லின் எழிலைக் கண்டு முத்துக் கடலில் சிப்பிக்குள் புகுந்து மறைந்ததோ! பட்டுப் பாதம் பூமி பட்டு நிற்பதாலே வலிக்குமே! - அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாவம் என்னை வந்து பிடிக்குமே! - கண்ணே! பக்கமாக இங்கே வந்திடு - அந்த வெட்கம் தன்னைக் கொஞ்சம் மறந்திடு: (வானில் மழையைத்) கட்டில் மெத்தை மீது வந்து அமர்ந்திடு - நேரம் பக்குவந் தெரிந்து நடந்திடு! அன்னத்திற்கு நடைதன்னைப் பயிற்றிடும் அன்னமே! - இன்று அமிர்தயோகமென்று அறிந்துகொள்ள வேணும் சொர்ணமே! (வானில் மழையைத்) 55